சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கம் (SCTA)

சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கத்தின் (SCTA) உறுப்பினராகுங்கள்

தேசியமரபுடைமைக் கழகத்தின் ஒரு வரலாற்று தளமாக விளங்கும் நமது உலகத்தரம் வாய்ந்த கோயிலின் தாய் அமைப்பாக சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கம் (SCTA) பெருமிதம் கொள்கிறது. சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த, செழிப்பான மற்றும் துடிப்பான வரலாற்றைக் கொண்ட ஒரு சிறந்த அமைப்பாகும். இந்த பிரசித்தி பெற்ற அமைப்பின் உறுப்பினர் தொகை இப்போது 1200 க்கும் அதிகமான உறுப்பினரை கொண்டுள்ள. சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கத்தில் உறுப்பினராக சேருவதன் மூலம் நீங்களும் உங்கள் பங்களிப்பை செய்யலாம்.

மேலும், உங்கள் நண்பர்கள், உங்கள் குழந்தைகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களையும் இந்த அமைப்பில் இணையச் செய்யலாம். உறுப்பினர்களுக்கு அவ்வப்போது பல சலுகைகள் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உடனடியாக SCTA இல் சேர்ந்து, மாதத்திற்கு $2.00 என்ற குறைந்த உறுப்பினர் சந்தாவைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் இணைந்த சமூகத்தின் ஒரு பகுதியாக இருங்கள். பரந்த அளவிலான சேவைகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலபின்வருமாறு:

  •  தகுதியான குழந்தைகளுக்கு உதவித் தொகை
  •  இளைஞர் முகாம்கள்
  •  மருத்துவமனைக்கு சென்று பார்வையிடல்
  •  திருமண இணை சேர்த்தல் மற்றும் திருமண ஏற்பாடுகள்
  •  முதியோர் பராமரிப்பு
  •  அந்திம கால சேவைகள்
  •  மேலும் பற்பல ...
 

ஒரு உறுப்பினராக இருப்பதன் நன்மைகள்

சிறப்பு கட்டணங்கள்: பல்நோக்கு மண்டபம், அந்தணர் சேவைகள் போன்றவற்றை முன் பதிவு செய்தல், SCTA மற்றும் கோயில் இணைந்து ஏற்பாடு செய்யும் சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் வகுப்புகளில் பங்கேற்றல் போன்றவற்றிற்கு விசேட விலைக் கழிவு வழங்கப்படும். மேலும் எப்போதும் உறுப்பினர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

இசை மற்றும் நடன வகுப்புகள்:- இசை நடனப் பள்ளியில் இசை மற்றும் நடன வகுப்புகளில் பங்கேற்கலாம்.

சமய மற்றும் கல்வி வகுப்புகள்: சைவ சமயப் பள்ளியின் வாரந்தஞாயிற்றுக் கிழமைகளில் இடம் பெறும் சமய மற்றும் கல்வி வகுப்புகளில் பயில முடியும்.

சமூக மேம்பாட்டு பகுதி: - உலகளாவிய ரீதியில் தமிழர்களிற்கான திருமண இணை சேர்த்தல்.

மருத்துவ மனைக்கு சென்று பார்வையிடல்: 3 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிடுதல்.

அந்திம கால சேவைகள்: மரபுகளிற்கு அமைவாக இறுதி கிரியை ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

திருமண ஏற்பாடுகள்

பட்ட படிப்புகக்கான மேற்கொள்ள இணைப்பு: கூடுதல் கல்விசார் அல்லது குறிப்பிட்ட பட்ட படிப்புகளை மேற்கொள்ள Management Development Institute of Singapore(MDIS) உடன் இணைய வழியமைத்தல். சில படிப்புகளுக்கு சிறப்பு கட்டணங்கள் வழங்கப்படும்.

தேவையானோருக்கான உதவித்தொகை வழங்கல்

நிதி உதவி போன்றவற்றிற்கான இணைப்பு: கடன்கள் மற்றும் நிதி உதவி போன்றவற்றிற்காக TCC கூட்டுறவுக்கழகம் (TCC Co-Operative) மற்றும் தமிழர் பேரவை பன்னோக்கு கூட்டுறவுக் கழகம் (TRC Multi-Purpose Co-Operative) போன்றவற்றுடன் இணைய துணை புரிதல்.

இளைஞர் முகாம்கள்:  சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும் சமூக திறன்களை வளர்க்கவும் உதவும்.

சுற்றுப் பயணங்கள்:  இலங்கை பாரம்பரிய சுற்றுலா, முதலியன.

சங்கு உங்கள் காலாண்டு செய்தி மடல்: சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கம் மற்றும் செண்பக விநாயகர் ஆலயம் ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளையும் விவரிக்கிறது.

மறைமுக பயன்கள்: உங்கள் வாழ் நாள் முழுவதும் பக்தி, பிரார்த்தனைகள், ஆன்மீக தோழமை மற்றும் ஊக்கங்கள் போன்றன சக உறுப்பினர்களால் கிடைக்கப் பெறும்.

இணைதல்: ஒரு பெரிய குடும்பத்தின் சக உறுப்பினர்களுடன் சேர்ந்து கொள்ளுதல்.

* குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வாழ்நாள் (Life) மற்றும் செயற்பாட்டு நிலையிலுள்ள (முழுமையாக பணம் செலுத்திய) உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை தயவு செய்து அறியத்தருகிறோம். நிலுவைத் தொகை உள்ள உறுப்பினர்களுக்கு சலுகைகள் கிடைக்காது.

செயலி பதிவிறக்கம் செய்ய (விரைவில்)

எங்கள் பக்தர்களுக்காக மொபைல் பயன்பாட்டை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்,
நீங்கள் google மற்றும் ஐபோன் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.